புஜாரா பந்து வீசியதைப் பார்த்து நக்கலாக ரியாக்‌ஷன் கொடுத்த அஸ்வின்; கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா கேள்வி

Published : Mar 14, 2023, 11:41 AM IST
புஜாரா பந்து வீசியதைப் பார்த்து நக்கலாக ரியாக்‌ஷன் கொடுத்த அஸ்வின்; கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா கேள்வி

சுருக்கம்

புஜாரா பந்து வீசியைப் பார்த்து நான் வேண்டுமென்றால் கிரிக்கெட்டை விட்டு வெளியெறவா என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி சாம்பியனானது. கடந்த 9 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து 5ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நின்னு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் லபுஷேன் அரைசதம் அடித்தார். இந்தப் போட்டியில் யாரலயும் வெற்றி பெற முடியாது. கண்டிப்பாக போட்டி டிரா தான் என்பது இரு அணியினருக்கும் தெரிந்த நிலையில், ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக இல்லை.

பிசிசிஐ வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா கிடையாதா?

அப்போது, போட்டியின் 77ஆவது ஓவரை சுப்மன் கில் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டீஸ்வர் புஜாரா பந்து வீசுவதற்கு வந்தார். புஜாரா பந்து வீச கிரீஸ்க்கு  வரும்போதே மைதானத்தில் இருந்த இந்திய அணியின் வீரர்களால் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் புஜாரா வீசியதைப் பார்த்த அஸ்வின் மோசமான ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். புஜாரா வீசிய ஓவருக்குப் பிறகு நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

புஜாரா, கில்லுக்கு பவுலிங் தந்தது ஏன்? 17 ஓவருக்கு முன்பே டிக்ளேர் செய்ய காரணம்? வெளியானது உண்மை தகவல்!

இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புஜாரா பந்து வீசும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் வேண்டுமென்றால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? என்று ஹிந்தியில் கேட்டுள்ளார். இந்த டுவிட்டர் மற்றும் அஸ்வின் கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஸ்வின் டுவீட்டுக்கு பதில் கொடுத்த புஜாரா, இல்லை, இது நன்றி சொல்லத்தான் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மறுபடியும் ட்வீட் பதிவு செய்த அஸ்வின், உங்களது எண்ணம் பாராட்டப்பட்டது. ஆனால், இது எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலிருந்து காயத்தால் விலகும் இந்திய வீரர் யார் தெரியுமா?

 

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!