இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் விக்கெட் இல்லாமல் இன்னிங்ஸை முடித்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி ஒரே நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல் இன்னிங்ஸை முடித்து கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக 5ஆவது முறையாக விக்கெட் இல்லாமல் இன்னிங்ஸை முடித்துள்ளார்.
India vs England 2nd Test: 8ஆவது முறையாக காலி செய்த பும்ரா - கோபத்தில் கொந்தளித்த ரூட்!
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் கைப்பற்றாமல் இன்னிங்ஸை முடித்திருக்கிறார். அதில், அதிகபட்ச ரன்கள் கொடுத்தது இந்த இன்னிங்ஸில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் இல்லாமல் இன்னிங்ஸை முடித்த அஸ்வின்:
0/56(25) vs இங்கிலாந்து, சென்னை - 2016
0/13(8) vs இலங்கை, கொல்கத்தா - 2017
0/48(12) vs தென் ஆப்பிரிக்கா, ராஞ்சி - 2019
0/19(5) vs வங்கதேசம், கொல்கத்தா - 2019
0/61(12) vs இங்கிலாந்து, விசாகப்பட்டினம் - 2024