இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக அரைசதம் அடித்துள்ளார்.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து சொந்த மண்ணில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
India vs England 2nd Test: 8ஆவது முறையாக காலி செய்த பும்ரா - கோபத்தில் கொந்தளித்த ரூட்!
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 76 ரன்களும், பென் ஸ்டோக்ஸ்ட் 47 ரன்களும் எடுத்துக் கொடுக்க இங்கிலாந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதைத் தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 28 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் 3ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இதில், ரோகித் சர்மா 13 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, ஜெய்ஸ்வால் 17 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
2ஆவது குழந்தையை எதிர்பார்க்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, உண்மையை உடைத்த ஏபி டிவிலியர்ஸ்!
இதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில், சுப்மன் கில் கடந்த 10 இன்னிங்ஸ்களுக்க் மேலாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார். இந்த நிலையில், தான் இந்தப் போட்டியில் பல போராட்டங்களுக்கு பிறகு 13ஆவது இன்னிங்ஸ்களில் முதல் அரைசதம் அடித்துள்ளார். ஒட்டு மொத்தமாக 5ஆவது அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் ரன்கள் எடுத்துக் கொடுத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஜத் படிதார் 9 ரன்களில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். உணவு இடைவேளை வரையில் இந்திய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கில் 60 ரன்களில் விளையாடி வருகிறார்