விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டி போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை 8ஆவது முறையாக ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டமிழக்க செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கிராவ்லி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆலி போப் மற்றும் ஜோ ரூட் கூட்டணி சேர்ந்து ரன்கள் குவித்தனர். ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்ற பும்ரா இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று மாறி மாறி வீசி திணற வைத்தார்.
2ஆவது குழந்தையை எதிர்பார்க்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, உண்மையை உடைத்த ஏபி டிவிலியர்ஸ்!
இதையடுத்து நேராக ஒரு பந்து வீச ஸ்லிப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில் கையில் கேட்ச் கொடுத்து ஜோ ரூட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 8ஆவது முறையாக அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அதே போன்று ஆலி போப்பிற்கு யார்க்கர் பந்து வீச ஸ்டெம்ப் எகிறி கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடைசியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் குவித்தது.
இதில், பும்ரா 15.5 ஓவர்களில் 5 மெய்டன் உள்பட 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.