ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் 11ல் இடம் பெறாதது குறித்து மன வேதனையாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று 2ஆவது முறையும் தோல்வி அடைந்து வெளியேறியது. இதில் பிளேயிங் 11ல் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. இந்தியா தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் என்று பலரும் அஸ்வினை எடுக்காததற்கு விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும், இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் மற்ற்ம் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் என்று மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தேன். கடந்த 2018 – 19 ஆம் ஆண்டுகளில் வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் கூட சிறப்பாக பந்து வீசி இருக்கிறேன். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என்று இந்திய அணி களமிறங்கியது.
ஒரு பந்தில் 18 ரன், ஒரே பந்துக்கு 2 டிஆர்.எஸ் என்று டிஎன்பிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யங்கள்!
இங்கிலாந்து மைதானங்களில் 4ஆவது இன்னிங்ஸில் தான் ஸ்பின்னர்களுக்கு அதிக வேலை இருக்கும். அப்படியிருக்கும் போது அதிக ரன்கள் எடுத்திருந்தால் 4ஆவது இன்னிங்ஸை ஸ்பின்னர்கள் வென்று கொடுப்பார்கள். சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்த போது, பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தவில்லையே என்று நினைத்தேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெறும் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்!
ஆதலால், பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிப்பதை தடுப்பதற்கு நான் சிறந்த பந்து வீச்சாளராக வர வேண்டும் என்று விரும்பினேன். பயிற்சிக்காக நான் ஷூவை போடும் போது எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துவிட்டு பந்து வீச்சாளராக மாறி இருக்க கூடாது என்று வருத்தம் ஏற்படுகிறது. பொதுவாக பேட்ஸ்மேன்களை எந்த மைதானத்திற்காகவும் வெளியில் அமரவைக்கப்பட மாட்டார்கள். மாறாக, பந்து வீச்சாளர்களை தான் அதுவும் ஸ்பின்னர்களைத் தான் வெளியில் அமர வைக்கும் நிலை ஏற்படுகிறது.
10 ரன்களில் சதத்தை கோட்டை விட்ட சாய் சுதர்சன்: லைகா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு!
இவ்வளவு ஏன், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பே நான் அணியில் இல்லை என்று எனக்கு தெரியும். எனினும், என்னால் முடிந்த உதவிகளை அணிக்காக செய்ய விரும்பினேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார்.
அதிரடி காட்டுவாரா சாய் சுதர்சன்? நெல்லை ராயல் கிங்ஸ் பவுலிங்!