இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் எடுக்க, துருவ் ஜூரெல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி பேட்டிங் செய்த போது பிட்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓடிய நிலையில் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து 5 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் மாறி மாறி பந்து வீசினர். எனினும் விக்கெட் விழவில்லை. இதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வினை நம்பி ரோகித் சர்மா ஓவர் கொடுத்தார். அதற்கு ஏற்ப பலனும் கிடைத்தது. கூடவே சாதனையும் படைக்கப்பட்டது.
Sarfaraz Khan: பெற்றோருக்கு பெருமை சேர்த்த சர்ஃபராஸ் கான் – வைரலாகும் வீடியோ!
ஆம், சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்துக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழக வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் 2ஆவது வீரராக அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தற்போது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 50, 100, 150, 200, 250, 300, 250, 400, 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை - முதலிடம் பிடித்த சர்ஃபராஸ் கான்!
இந்த நிலையில், அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
Most wickets in Test cricket history.
- Ashwin joins the elite 500 club. pic.twitter.com/ZXkYCISgk2