இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டியின் போது மழை பெய்த நிலையில், அவுட்ஃபீல்டு உலர்த்துவதற்காக புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மைதான ஊழியர்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியானது நேற்று கொழும்புவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.
Jasprit Bumrah: தந்தையான பும்ராவை பாராட்டி பரிசு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் வீடியோ!
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஷாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் ஷஹீனுக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றார்.
சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட அவர், 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார். சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார்.
India vs Pak: ரிசர்வ் டே – நாளைக்கு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி!
இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரி உடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் தான் சிறிது நேரத்திற்கு முன்பாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் போட்டியானது நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு மழை நின்றதையடுத்து, மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே நடுவர்கள் மைதானத்தை பார்வையிட்டனர். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று பார்வையிட்டனர். இதையடுத்து இரவு 9 மணிக்கு போட்டி தொடங்கினால் 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என்று சொல்லப்பட்டது.
எனினும், 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று (11-09-2023) ஒத்தி வைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மீண்டும் நின்ற இடத்திலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!
இந்த நிலையில், தான் மைதான ஊழியர்கள் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கண்டுபிடிப்பு, மிகவும் நன்றியற்ற வேலையைச் செய்யும் மைதான ஊழியர்கள் என்று அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டியில் மழையால் மைதானத்தின் பல பகுதிகளில் ஈரப்பதம் இருந்த நிலையில், உலர்த்துவதற்கு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக கொழும்பு மைதான ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Innovation 🤝🤝
Ground staff doing the most thankless job. pic.twitter.com/gAhu4WwJGI