India vs Pak: ரிசர்வ் டே – நாளைக்கு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

By Rsiva kumar  |  First Published Sep 10, 2023, 9:42 PM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறவில்லை. கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.

Pakistan vs India Super Fours 3rd Match: ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்!

Tap to resize

Latest Videos

ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஷாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக ஒருநாள் போட்டியில் ஷஹீனுக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றார்.

சுப்மன் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட அவர், 37 பந்துகளில் 10 பவுண்டரி அடித்த சுப்மன் கில் தனது 7ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷாஹீன் அஃப்டி ஓவரில் மட்டும் 6 பவுண்டரி அடித்துள்ளார். சுப்மன் கில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 240 இன்னிங்ஸில் விளையாடி ரோகித் சர்மா 50 அரைசதமும், 30 சதமும் அடித்துள்ளார்.

Pakistan vs India Super Fours:ரோகித் சர்மா அடித்த அடிக்கு வானமே ஆனந்த கண்ணீர்; வரலாற்று சாதனை படைத்த ஹிட்மேன்!

இதில், தொடக்க வீரராக ரோகித் சர்மா 159 இன்னிங்ஸ் விளையாடி 28 சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். ஷதாப் கான் வீசிய ஓவரில் 6, 6, 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியுள்ளார். 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.

 

அவர், இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆனால், அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து 22 ரன்களில் 10000 ரன்கள் எடுக்கும் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.

KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!

சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரி உடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் தான் சிறிது நேரத்திற்கு முன்பாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் போட்டியானது நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு மழை நின்றதையடுத்து, மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையே நடுவர்கள் மைதானத்தை பார்வையிட்டனர். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை என்று பார்வையிட்டனர். 7.30 மணிக்கு ஒருமுறை, 8 மணிக்கு ஒரு முறை மற்றும் 8.30 மணிக்கு ஒருமுறை என்று தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர்.

Pakistan vs India Super Fours:மைதான ஊழியர்களுக்கு தார்பாய் கொண்டு வர உதவி செய்த ஃபஹர் ஜமான்; வைரலாகும் வீடியோ!

இதையடுத்து இரவு 9 மணிக்கு போட்டி தொடங்கினால் 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என்று சொல்லப்பட்டது. எனினும், 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மீண்டும் நின்ற இடத்திலிருந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan vs India Super Fours: பலத்த காற்றுடன் கனமழை; இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!

மேலும், 12 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டி நடக்க உள்ளது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த முக்கியமான போட்டிகளில் இந்திய அணி விளையாடினால், வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 

4.50 pm - Rain started.
5.30 pm - Rain stopped.
6 pm - Rain came back.
6.10 pm - Rain stopped.
8.35 pm - Rain came back.

Feel for players, fans & ground staff. pic.twitter.com/EiwExbungF

— Johns. (@CricCrazyJohns)

 

September 10th - India vs Pakistan.

September 11th - India vs Pakistan reserve day.

September 12th - India vs Sri Lanka.

India will be playing in 3 consecutive days in the Asia Cup. pic.twitter.com/8K0KaQG9DU

— Johns. (@CricCrazyJohns)

 

click me!