ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் ஆடியது. இதில், ஐபிஎல் தொடருக்கு பின் கேஎல் ராகுல் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக அவர் இடம் பெறவில்லை. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய ரோகித் சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அடுத்தடுத்து களமிறங்கினர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் பின்னர் ஹரீஷ் ராஃப் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார்.
KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!
இதன் பின்னர் 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது கேஎல் ராகுல் 17 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார். இதன் மூலமாக 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருமே 53 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்தப் பட்டியலில் அனுபவ வீரர் ஷிகர் தவான் 48 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்திலும், நவ்ஜோத் சிங் சித்து 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pakistan vs India Super Fours: பலத்த காற்றுடன் கனமழை; இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!