KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!

Published : Sep 10, 2023, 07:00 PM IST
KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!

சுருக்கம்

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பேக்கப் வீரராக இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

Pakistan vs India Super Fours:மைதான ஊழியர்களுக்கு தார்பாய் கொண்டு வர உதவி செய்த ஃபஹர் ஜமான்; வைரலாகும் வீடியோ!

இன்றைய போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று எதுவரையில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டதோ அதிலிருந்து மீண்டும் போட்டியானது நாளை தொடங்கப்படும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டுமே, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இந்த ரிசர்வ் டே கிடையாது.

Pakistan vs India Super Fours: பலத்த காற்றுடன் கனமழை; இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!

இது ஒரு புறம் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பெற்ற சஞ்சு சாம்சான் 9, 51, 12, 7, 13 என்று மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையிலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றார். அவர் 1*, 40 என்று ரன்கள் எடுத்திருந்தார். எனினும், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக இடம் பெறவில்லை.

PAK vs IND: ஒரு நாள் கிரிக்கெட்டில் 50ஆவது அரைசதம் அடித்த ஹிட்மேன் – 22 ரன்களில் சாதனையை கோட்டைவிட்ட ரோகித்!

இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்காக கேஎல் ராகுல் இலங்கை வந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், அதிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ind vs Pak Super 4: 37 பந்து 10 பவுண்டரியில் 50 ரன்கள்; பாகிஸ்தான் பவுலர்களை அலறவிட்ட இளவரசர் சுப்மன் கில்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?