IPL 2023: இவரு கண்டிப்பா இந்தியாவுக்காக விளையாடுவாரு - இளம் வீரரை பாராட்டி பேசிய ரவி சாஸ்திரி!

By Rsiva kumar  |  First Published Apr 14, 2023, 2:51 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்காக இந்தியாவுக்காக விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராயல் சேலஞ்ஸர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கூட 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். சென்னைக்கு எதிரான போட்டியில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

IPL 2023: அடிமேல் அடி வாங்கும் சிஎஸ்கே; தோனியின் முழங்கால் காயம் குறித்து சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக 3 போட்டிகளில் மொத்தமாக 147 ரன்களை குவித்துள்ளார். வெறும் 20 வயதே ஆகும் திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் வருங்கால நட்சத்திர வீரராக திகழ்வார்.  இந்த நிலையில், இந்த 16ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மா இன்னும் 6, 8 மாதங்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு உண்டு. அப்படி அவர் விளையாடாமல் போனால் அது தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி பேசியுள்ளார்.

யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம்; ரசிகர்களுக்கு பஞ்சாப் ஜெர்சியை வீசி எறிந்த ப்ரீத்தி ஜிந்தா; வைரலாகும் வீடியோ!

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: மிடில் ஆர்டரில் தனது திறமையை வெளிப்படுத்தி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கிரிக்கெட் செயல்பாடுகள் இந்திய அணியின் வருங்காலத்திற்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

IPL 2023: 5 கோடியிலிருந்து 50 லட்சத்திற்கு வந்த மோகித் சர்மா: முதல் முறையாக ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்!

click me!