ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்து, 154 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: 2 சிக்ஸர் அடித்த தோனியை கட்டுப்படுத்தியது எப்படி..? சூட்சமத்தை சொன்ன சந்தீப் ஷர்மா
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கை டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஷமி. செம ஃபார்மில் அபாரமாக ஆடி இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் ஷிகர் தவானை 8 ரன்களுக்கு வீழ்த்தினார் ஜோஷுவா லிட்டில்.
அதிரடியாக ஆடி மேத்யூ ஷார்ட் 24 பந்தில் 36 ரன்கள் அடித்த நிலையில், அவரை ரஷீத் கான் வீழ்த்தினார். மந்தமாக ஆடிய பானுகா ராஜபக்சா 26 பந்தில் 20 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஜித்தேஷ் ஷர்மா(25) மற்றும் சாம் கரன் (22) ஆகிய இருவரையும் மோஹித் சர்மா வீழ்த்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல்லில் ஆடிய சீனியர் பவுலரான மோஹித் சர்மா 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்து 154 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.