IPL 2023: கோலி - கம்பீர் 2 பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும்..! ரவி சாஸ்திரி அட்வைஸ்

By karthikeyan V  |  First Published May 4, 2023, 6:04 PM IST

இந்திய கிரிக்கெட்டின் 2 மிகப்பெரிய அடையாளங்களாக திகழும் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் அமர்ந்து பேசி தங்களுக்கு இடையேயான பிரச்னையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையேயான மோதல் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது. ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டிக்கு பின், கோலி - கம்பீர் இடையே கடும் மோதல் மூண்டது.

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த மோதலை அடுத்து, இவர்கள் இருவருக்கும் போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் முதல் முறையல்ல.

Latest Videos

2013ம் ஆண்டு நடந்த மோதல் தான் கோலி - கம்பீர் இடையே 10 ஆண்டுகளாக நீடித்துவரும் பனிப்போருக்கு காரணம். அதற்கு முன் இருவருக்கும் இடையே நல்ல உறவுதான் இருந்துவந்தது. கோலியின் சர்வதேச கெரியரின் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்த அதே போட்டியில் கம்பீர் 150 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தன்னுடன் இணைந்து அந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த அப்போதைய இளம் வீரரான கோலிக்கு அந்த ஆட்டநாயகன் விருதை வழங்கி ஊக்குவித்தவர் கம்பீர்.

IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்

அதன்பின்னர் 2011 ஒருநாள் உலக கோப்பை ஃபைனலிலும் சச்சின், சேவாக் ஆட்டமிழந்த பின்னர் கம்பீர் - கோலி இடையேயான பார்ட்னர்ஷிப் முக்கியமானது. இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கின்றனர். இந்திய அணி தோனி தலைமையில் வென்ற டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளில் முக்கிய பங்காற்றியவர் கம்பீர். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை செய்தவர்.

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஜொலித்துவருகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு கோலியும் அபாரமான பங்களிப்பை செய்திருக்கிறார். 2013 வரை இவர்களுக்கு இடையே நல்ல உறவுதான் இருந்தது. 2013 ஐபிஎல்லில் ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டியின்போது இருவருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.

அதன்பின்னரே இருவருக்கும் இடையே உறவு சரியாக இல்லை. விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்லாதது குறித்து கம்பீர் அவ்வப்போது விமர்சனம் செய்துவந்திருக்கிறார். அதேவேளையில், கோலியை பாராட்டியும் இருக்கிறார் கம்பீர்.

IPL 2023: SRH vs KKR போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்! கிடைத்த சான்ஸ்களை வீணடித்த தமிழக வீரர் நீக்கம்

இப்படியாக இருந்துவந்த நிலையில், இந்த சீசனில் இருவருக்கும் இடையேயான மோதல் மீண்டும் அவர்களுக்கு இடையேயான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, இந்த விவகாரத்தை கம்பீர் - கோலி இருவரும் இன்னும் நன்றாக கையாண்டிருக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறார்கள். ஒரே மாநில அணிக்காகவும் ஆடியிருக்கின்றனர். இருவருமே டெல்லியை சேர்ந்தவர்கள். கம்பீர் 2 உலக கோப்பை வின்னர். விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் அடையாளம். எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். 

click me!