ஆர்சிபி அணி தான் தனக்கு பிடித்த அணியும் என்றும், விராட் கோலி தான் தனக்கு பிடித்தமான வீரர் என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சியும், பின்னணி பாடகர் அரிஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதையடுத்து அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடந்தது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்த நேபாள்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா Expression Queen என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளில் தனக்கு பிடித்தமான அணி எது என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், நான் பெங்களூரு கர்நாடகாவைச் சேர்ந்தவள். ஆகையால் ஆர்சிபி. இந்த ஆண்டு கோப்பை எங்களுடையது என்று கூறியுள்ளார். ஆர்சிபி விளையாடுவதை பார்க்கலாம் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
விராட் கோலி காலில் விழுந்து வணங்கிய ரசிகர்: அவரை தூக்கி கட்டியணைத்த கிங்!
அப்போது அவரிடம் பிடித்தமான கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விராட் என்று பதிலளித்துள்ளார். அவர் அற்புதமானவர் என்று கூறியுள்ளார். நேற்று லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் ஆடியது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக 9 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பிடித்துள்ளது.
விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!