டி20 உலக கோப்பையில் அந்த வீரரை எடுக்காதது தான் இந்திய அணி செய்த மாபெரும் தவறு..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 16, 2022, 9:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான அணியில் குல்தீப் யாதவை எடுக்காததுதான் இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது.

டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆடாதது பின்னடைவுதான் என்றாலும், பும்ரா இல்லாத குறை தெரியாத அளவிற்கு அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூவரும் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பெரிய பிரச்னை, ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாததுதான். 

ரஞ்சி டிராபி: வெறித்தனமா இலக்கை விரட்டிய ஜெகதீசன், சுதர்சன்.. ஹைதராபாத்துக்கு தோல்வி பயம் காட்டிய தமிழ்நாடு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருந்தபோதிலும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை. அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் தான் ஆடும் லெவனில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவருமே மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். அவர்களது பவுலிங்கை எதிரணி பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொண்டு ஸ்கோர் செய்தனர். அவர்களிடம் விக்கெட்டையும் இழக்கவில்லை.

எனவே ஸ்பின் பவுலிங் தான் பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தி வங்கதேச பேட்டிங் ஆர்டரை சரித்து 150 ரன்களுக்கு அந்த அணியை சுருட்ட காரணமாக இருந்த குல்தீப் யாதவின் பவுலிங்கை பார்த்து அசந்துபோன ரஷீத் லத்தீஃப், குல்தீப்பை டி20 உலக கோப்பை அணியில் எடுக்காதது பெரிய தவறு என்று கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷீத் லத்தீஃப், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 3 விக்கெட் விழுந்தபின்னர் தான் குல்தீப் பந்துவீச வந்தார். அவரது பவுலிங்கை கணிக்க வங்கதேச வீரர்கள் தவறிவிட்டனர். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான சைனாமேன் பவுலருக்கு வேகம் தேவை என்று பலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மையில்லை. அதற்கு பெரிய உதாரணம் குல்தீப் யாதவ் தான்.

வெறும் 15 ரன்னுக்கு ஆல்அவுட்; கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோர் அடித்து மோசமான சாதனையை படைத்த சிட்னி தண்டர்

ரஷீத் கான் வேகமாக வீசுவார். ஆனால் குல்தீப் யாதவ் தூக்கி போடுவார். நல்ல கூக்ளி, லெக் பிரேக், ஃப்ளிப்பர் இருந்தாலே ஜொலிக்கலாம். வங்கதேச வீரர்கள் பொதுவாக ஸ்பின்னர்களை நன்றாக ஆடுவார்கள். ஆனால் அவர்களை அதற்கு கொஞ்சம் கூட அனுமதிக்கவில்லை குல்தீப். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப்பை எடுக்காதது மிகப்பெரிய தவறு. எல்லாராலும் அவரது பவுலிங்கை கணிக்க முடியாது. குல்தீப்பை குறைந்தபட்சம் 2 ஃபார்மட்டிலாவது இந்திய அணி ஆடவைக்க வேண்டும் என்று ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

click me!