குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரஷீத் கான்!

By Rsiva kumar  |  First Published May 13, 2023, 1:33 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ரஷீத் கான் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.


மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 57ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

விஜய் சங்கர் 29 ரன்களில் வெளியேற டேவிட் வார்னர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ரஷீத் கான் 32 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில், 3 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். எனினும், கடைசி வரை போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tap to resize

Latest Videos

கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!

இந்தப் போட்டியில் குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் மற்றும் அல்சாரி ஜோசஃப் இருவரும் இணைந்து 9ஆவது விக்கெட் பார்னர்ஷிப்பிற்கு 88 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரன் சேஸிற்கு அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் அஷீத் கான் 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டு சனத ஜெயசூர்யா 11 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

3ஆவது இடத்தில் மும்பை: இக்கட்டான நிலையில் LSG, RR, RCB, PBKS!

அவரைத் தொடர்ந்து ஆடம் கில்கிரிஸ், கிரான் போலார்டு மற்றும் ரஷீத் கான் ஆகியோர் 10 சிக்ஸர்களுடன் அடுத்த இடம் பிடித்துள்ளனர்.மும்பைக்கு எதிராக குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 10 சிக்சர்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி 4 விக்கெட்டுகள் மற்றும் 79 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். மேலும், 8ஆவது விக்கெட் மற்றும் அதற்கும் கீழாக இறங்கி 79 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 6 சிக்ஸர்களை அடித்த சூர்யகுமார் யாதவ்வை பின்னுக்கு தள்ளி ரஷீத் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் 6 தான், ஆனால், ரஷீத் கான் 10: போராடி தோற்ற குஜராத் டைட்டன்ஸ்!

click me!