மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற விஷ்ணு வினோத் தனது அதிரடி ஆட்டத்தால் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 57ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். விஷ்ணு வினோத் 20 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இதில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். தனக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பான முறையில் செய்த விஷ்ணு வினோத் யார்? எப்படி ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்?
3ஆவது இடத்தில் மும்பை: இக்கட்டான நிலையில் LSG, RR, RCB, PBKS!
கேரளா மாநிலம் செங்கனூரில் கல்லிசேரி என்ற பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்துள்ளார். அரசியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். டெல்லி அணிக்கு எதிராக அறிமுகம் ஆன அவர் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. இதையடுத்து அவர் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படவில்லை. எனினும் உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்து வந்தார். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத் அணிகளில் ஒவ்வொரு சீசன்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவர் களம் இறக்கப்படவே இல்லை.
சூர்யகுமார் யாதவ் 6 தான், ஆனால், ரஷீத் கான் 10: போராடி தோற்ற குஜராத் டைட்டன்ஸ்!
கடந்த 6 ஆண்டுகளாக போராடி வந்த அவர், ஐபிஎல் தொடரில் இடம் பெற்றும் எந்த போட்டியிலும் களம் இறக்கப்படவில்லை. இந்த நிலையில், 29 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த சீசனில் முதல் போட்டியில் அவர் களமிறங்கினார். இதில்,அவர் 20 பந்துகளில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், அவரது இடத்தில் திலக் வர்மாவும் இருக்கிறார். ஆதலால், யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
ஒரே நாளில் செலிபிரிட்டியான சிஎஸ்கே ரசிகை: சினிமா வாய்ப்பு வருமா?