ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமனம்

Published : Dec 29, 2022, 06:44 PM IST
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமனம்

சுருக்கம்

ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.  

டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

தினேஷ் கார்த்திக் சொன்னது நடந்தது.. நண்பனை கைவிட்ட கேப்டன் ரோஹித்..! சீனியர் வீரரின் கிரிக்கெட் கெரியர் ஓவர்

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆஃப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷீத் கான், ஏற்கனவே 2019ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

2019ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷீத் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆஃப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆஃப்கான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான விருது..! ஐசிசி பரிந்துரை பட்டியலில் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்

 வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷீத் கான் தான் ஆஃப்கான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார். அந்தவகையில், ரஷீத் கான் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?