2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான விருது..! ஐசிசி பரிந்துரை பட்டியலில் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்

By karthikeyan V  |  First Published Dec 29, 2022, 5:44 PM IST

2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
 


ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடிய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை என்ற விருது வழங்கி கௌரவித்துவருகிறது.

அந்தவகையில், 2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது ஐசிசி. இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் மற்றும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான்.

Tap to resize

Latest Videos

ICC WTC புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின்தங்கிய தென்னாப்பிரிக்கா..! இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு வலுவானது

ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா, பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் ஜிம்பாப்வே அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். குறிப்பாக டி20 உலக கோப்பையில் அபாரமாக ஆடினார். ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்று வரை வந்ததற்கு சிக்கந்தர் ராசா முக்கிய காரணம்.

டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சாம் கரன். டெத் பவுலிங், அதிரடியான பேட்டிங் என இங்கிலாந்துக்கு முழு பங்களிப்பை அளித்ததன் விளைவாக, தொட ர் நாயகன் விருதையும் வென்றார். அதன் பலனாகத்தான் ஐபில் ஏலத்தில் உச்சபட்ச தொகையான ரூ.18.5 கோடிக்கு விலைபோனார். பாகிஸ்தான் அணியை தனி ஒருவனாக தூக்கி நிறுத்தியவர் ரிஸ்வான். எனவே அவரது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தான். 2022ம் ஆண்டில் 1164 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், 2022ல் அதிக டி20 ரன்கள் அடித்த வீரர் ஆவார். மேலும் இந்த ஆண்டில் 69 சிக்ஸர்களை விளாசியதுடன், 890 புள்ளிகளுடன் ஐசிசி டி20 ரேங்கிங்கில் முதல் இடத்திலும் உள்ளார். இந்தியாவின் 360 என்றழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் புது சரித்திரம்  படைத்துவரும் நிலையில், அவரும் ஐசிசி விருதுக்கான போட்டியில் உள்ளார். அவர் விருதை வெல்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. 

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

2022ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு 23 போட்டிகளில் ஆடி 590 ரன்களை குவித்துள்ளார் ஸ்மிரிதி.
 

click me!