கம்பீர் - கோலி மோதல்.. நடந்தது என்ன..? 7 ஆண்டுக்கு பின் உண்மையை சொன்ன கிரிக்கெட் வீரர்

By karthikeyan VFirst Published Jul 1, 2020, 6:41 PM IST
Highlights

2013 ஐபிஎல்லில் கோலி மற்றும் கம்பீருக்கு இடையேயான மோதல் குறித்து அப்போதைய கேகேஆர் அணியில் ஆடிய ரஜாத் பாட்டியா பேசியுள்ளார். 
 

2013 ஐபிஎல்லில் கோலி மற்றும் கம்பீருக்கு இடையேயான மோதல் குறித்து அப்போதைய கேகேஆர் அணியில் ஆடிய ரஜாத் பாட்டியா பேசியுள்ளார். 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும், கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

ஆனால் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ரோஹித், தோனி ஆகிய இருவரும் அமைதியான நிதானமான கேப்டன்கள். ஆனால் கம்பீரும் கோலியும் ஆக்ரோஷமான கேப்டன்கள். 

இருவருமே பதிலடி கொடுப்பதில் ஒரே மாதிரியான கேரக்டரை கொண்ட வீரர்கள். விட்டுக்கொடுக்காத ஆக்ரோஷமான குணாதிசயம் வாய்ந்த அவர்கள் இருவருக்கும் இடையே ஐபிஎல்லில் ஒருமுறை மோதல் ஏற்பட்டது. 2013 ஐபிஎல்லில் பெங்களூருவில் நடந்த ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இருவரும் மோதிக்கொண்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

ஐபிஎல்லில் இந்திய வீரர்களுக்கு இடையேயான மிக பிரபலமான மோதல் அது. ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை அறைந்த சம்பவத்திற்கு பின்னர், ஐபிஎல்லில் இரு இந்திய வீரர்கள் கடுமையாக மோதிக்கொண்டது அந்த சம்பவம் தான். 

அந்த மோதல் சம்பவம் குறித்து அப்போதைய கேகேஆர் அணியில் ஆடிய ரஜாத் பாட்டியா Asianet Newsable-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கம்பீர் - கோலி மோதல் குறித்து பேசிய ரஜாத் பாட்டியா, இரு ஆக்ரோஷமான வீரர்களுக்கு இடையே இதுபோன்ற மோதல் ஏற்படுவது இயல்பு தான். இருவருமே தங்கள் அணிக்காக சிறப்பாக ஆட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையும் வேட்கையும் கொண்டவர்கள். போட்டியின் விறுவிறுப்பான கட்டத்தில், சூடான சில சம்பவங்கள் நடப்பது இயல்புதான். அப்படியானதுதான் அந்த மோதலும். அதன்பின்னர் அவர்கள் இருவரும் மோதி நான் பார்த்ததேயில்லை. அந்த மோதல் சம்பவமும் படுமோசமானதாக மாறவில்லை என்று ரஜாத் பாட்டியா தெரிவித்துள்ளார். 
 

click me!