டிவில்லியர்ஸ் தேர்வு செய்த பெஸ்ட் ஐபிஎல் லெவன்..! செம செலக்‌ஷன்

By karthikeyan VFirst Published Jul 1, 2020, 3:12 PM IST
Highlights

டிவில்லியர்ஸ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

டிவில்லியர்ஸ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரருமானவர் ஏபி டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸுக்கு அவரது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவிற்கு நிகராக இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் கோலியுடன் இணைந்து அசத்திவரும் டிவில்லியர்ஸால், அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருபெரும் வீரர்கள் ஆர்சிபி அணியில் இருந்தும், அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

கிரிக்கெட்டில் எந்தவிதமான பேட்டிங் ஆர்டரிலும் ஆடக்கூடிய, எந்தவிதமான பங்களிப்பையும் அணிக்காக செய்யக்கூடியவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக திகழும் டிவில்லியர்ஸ், தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக இந்தியர்களான  சேவாக் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார் டிவில்லியர்ஸ். மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்த டிவில்லியர்ஸ், நான்காம் வரிசைக்கு தனது பெயரையே தெரிவித்தார். 

ஐந்தாம் வரிசையில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸையும் விக்கெட் கீப்பராக தோனியையும் தேர்வு செய்த டிவில்லியர்ஸ், இந்த அணிக்கு தோனியையே கேப்டனாக தேர்வு செய்தார். ஸ்பின்னர்களக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்த டிவில்லியர்ஸ், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ரபாடா, பும்ரா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். 

டிவில்லியர்ஸ் தேர்வு செய்த ஐபிஎல் லெவன்:

வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ரபாடா, பும்ரா.
 

click me!