கோலி தலைமையிலான இந்திய அணியால் கங்குலி தலைமை அணியை வீழ்த்த முடியாது..! முன்னாள் வீரர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 1, 2020, 4:29 PM IST
Highlights

கோலி தலைமையிலான இந்திய அணியை விட, கங்குலி தலைமையிலான அணி சிறந்தது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 
 

கோலி தலைமையிலான இந்திய அணியை விட, கங்குலி தலைமையிலான அணி சிறந்தது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் கங்குலி. சூதாட்டத்த சர்ச்சையால் சிதைந்து போயிருந்த இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்து, இளம் ரத்தத்தை பாய்ச்சி, சிறந்த அணியாக உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடவைத்தவர் கங்குலி. 

கங்குலி கேப்டனானதற்கு பிறகு தான், பாகிஸ்தான் அணியை இந்திய அணி அதிகமாக வீழ்த்த தொடங்கியது. அதேபோல, இந்தியாவில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சியது கங்குலி தலைமையிலான இந்திய அணி. 

கங்குலி தலைமையிலான இந்திய அணி தான், இந்திய கிரிக்கெட்டின் எல்லா காலத்திலுமே சிறந்த அணி காம்பினேஷன் என்பதில் ஐயமில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், சேவாக், யுவராஜ் சிங் ஆகிய தலைசிறந்த பேட்ஸ்மேன்களும் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஸ்பின் ஜோடியும் ஜாகீர் கான் - அகார்கர் - நெஹ்ரா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியும் என மிகச்சிறந்த வீரர்களை ஒரே காலக்கட்டத்தில் கொண்டிருந்த அணி தான் கங்குலி தலைமையிலான அணி. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்துள்ளது. டெஸ்ட் வெற்றிகளின் எண்ணிக்கையில், கோலி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாலும், கோலி தலைமையிலான இந்திய அணி, வெளிநாடுகளில் பெரிதாக சாதிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கோலி தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை வென்றது சாதனை படைத்தது. ஆனால் அப்போது அந்த தொடரில் ஸ்மித் - வார்னர் ஆடவில்லை. ஸ்மித் - வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியதாகவே பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் கருதுகின்றனர். அது இந்திய அணியின் தவறல்ல; வெற்றி வெற்றிதான் என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் ஸ்மித்-வார்னர் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதான் உண்மையான வெற்றி. அதுமட்டுமல்லாமல் 2018ல் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் டெஸ்ட் தொடர்களில் தோற்றது இந்திய அணி. அண்மையில் கூட நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி. 

ஆனாலும் கோலி தலைமையிலான இந்திய அணியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த சிறந்த டிராவலிங் இந்திய அணி இதுதான் என்று கோலி தலைமையிலான அணிக்கு புகழாரம் சூட்டினார். ஆனால் கங்குலி, கவாஸ்கர் ஆகியோர் அப்போதே இந்த கருத்தில் உடன்படவில்லை. 

இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா, கோலி தலைமையிலான இந்திய அணியை விட கங்குலி தலைமையிலான இந்திய அணி தான் சிறந்தது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, கங்குலி தலைமையில் நாங்கள், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை டிரா செய்தோம். பாகிஸ்தானில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வென்றோம். இங்கிலாந்திலும் தோல்வியடையாமல், தொடரை டிரா செய்தோம். கங்குலி தலைமையிலான டெஸ்ட் அணி தான் நமக்கு வெளிநாடுகளில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை கற்றே கொடுத்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது. ஆனால் தென்னப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரில் தோற்றது என்று தெரிவித்துள்ளார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணி:

வீரேந்திர சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், கங்குலி(கேப்டன்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), ஹர்பஜன் சிங்ஹ், அனில் கும்ப்ளே, அஜித் அகார்கர், ஜாகீர் கான்.

கோலி தலைமையிலான இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி/பும்ரா.
 

click me!