GT vs RR: பட்லர், சாம்சன் காட்டடி பேட்டிங்..! குஜராத் டைட்டன்ஸூக்கு கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published May 24, 2022, 9:38 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் தகுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது. 
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றூ கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், ஒபெட் மெக்காய்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 28 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் 3 சதங்கள் அடித்து, பின்னர் கடந்த சில போட்டிகளில் பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய பட்லர், இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி கடைசி பந்துவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர்56 பந்தில் 89 ரன்களை குவித்தார். 20 ஓவரில் 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 -

click me!