IPL 2022: ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி அதிரடி

Published : May 24, 2022, 08:07 PM IST
IPL 2022: ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி அதிரடி

சுருக்கம்

ரிஷப் பண்ட் மும்பைக்கு எதிரான போட்டியில் ரிவியூ எடுக்க தவறியதுதான் போட்டியின் முடிவையே மாற்றியது. அதனால் தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடக்கூடாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.  

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட், அணிக்குள் வந்த புதிதில் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக்கொண்ட ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கியதால் விமர்சனங்கள் குறைந்தன.

டி.ஆர்.எஸ் எடுப்பதிலும் கேப்டனுக்கு தன்னால் முடிந்தளவிற்கு சரியாக வழிகாட்டினார். ரிஷப் பண்ட்டுக்கு எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், ஐபிஎல்லில் மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 15வது ஓவரில் டிம் டேவிட்டுக்கு எடுக்க வேண்டிய ஒரு ரிவியூவை எடுக்காமல் விட்டார். அதுதான் அந்த போட்டியில் டெல்லி அணி தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க காரணமாக அமைந்தது.

இதையடுத்து ரிவியூ எடுப்பதில் வல்லவரான தோனியுடன் மீண்டும் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுகிறார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில், தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடக்கூடாது என்று கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, பண்ட்டை தோனியுடன் ஒப்பிடாதீர்கள். தோனி நீண்டநெடிய அனுபவம் கொண்டவர். சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20, ஐபிஎல் என மொத்தம் 500 போட்டிகளுக்கு மேல் கேப்டன்சி செய்தவர். எனவே அவருடன் ரிஷப்பை ஒப்பிடுவது சரியல்ல என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!