GT vs RR: முதல் தகுதிப்போட்டியின் டாஸ் ரிப்போர்ட்..! குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்

By karthikeyan VFirst Published May 24, 2022, 7:16 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான முதல் தகுதிப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிப்போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறஙியுள்ளன. ஆனால் தோற்கும் அணிக்கு ஃபைனலுக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியில் தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் 2வது தகுதிப்போட்டியில் மோதும். அதில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த தகுதிப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக அல்ஸாரி ஜோசஃப் சேர்க்கப்பட்டுள்ளார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், ஒபெட் மெக்காய்.
 

click me!