#RRvsPBKS ராஜஸ்தான் ராயல்ஸில் 3 இங்கிலாந்து வீரர்கள்..! உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 12, 2021, 04:15 PM IST
#RRvsPBKS ராஜஸ்தான் ராயல்ஸில் 3 இங்கிலாந்து வீரர்கள்..! உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது இந்த போட்டி.

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் கழட்டிவிடப்பட்டதால், சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடுகிறது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இறங்குவார்கள். 

3ம் வரிசையில் கேப்டன் சஞ்சு சாம்சனும், 4ம் வரிசையில் இளம் வீரர் ரியான் பராக்கும், மிடில் ஆர்டரில் இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன், ஷிவம் துபே, ராகுல் டெவாட்டியா ஆகியோர் ஆடுவார்கள். ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸும் ஆடும் லெவனில் இருப்பார். ராகுல் டெவாட்டியாவுடன் மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னராக ஷ்ரேயாஸ் கோபால் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக உனாத்கத்தும் கார்த்திக் தியாகியும் ஆடுவார்கள்.

காயம் காரணமாக ஆர்ச்சர் ஆடவில்லை. இது பெரும் பாதிப்பாக அமையும் என்றாலும், கிறிஸ் மோரிஸ், உனாத்கத், கார்த்திக் தியாகி ஆகிய மூவரும் சிறந்த பவுலர்கள் என்பதால், ஆர்ச்சர் இல்லாதது பெரியளவில் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 4 வெளிநாட்டு வீரர்களில் மூவர் இங்கிலாந்து வீரர்கள் தான். பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன். ஆர்ச்சர் வந்துவிட்டால், அவரும் ஆடுவார்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், ஷிவம் துபே, ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், லிவிங்ஸ்டன், ஷ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனாத்கத், கார்த்திக் தியாகி.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!