#SRHvsKKR அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. அல்லாடும் சன்ரைசர்ஸ்

Published : Apr 11, 2021, 09:56 PM IST
#SRHvsKKR அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. அல்லாடும் சன்ரைசர்ஸ்

சுருக்கம்

188 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்த 2 ஓவரில் தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்துவிட்டது.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. சென்னையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, நிதிஷ் ராணா(80) மற்றும் ராகுல் திரிபாதியின்(53) அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது.

188 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும் சஹாவும் களமிறங்கினர். பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் வார்னர் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஷகிப் அல் ஹசன் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் 7 ரன்னுக்கு போல்டாகி வெளியேறினார் சஹா.

அதிரடி தொடக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 10 ரன்னுக்கே சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பேர்ஸ்டோவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஆடிவருகின்றனர். இவர்கள் இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!