#IPL2021 13 வருஷமா பேசிகிட்டே தானடா இருக்கீங்க; செயலில் காட்டுங்க..! ஆர்சிபிக்கு கம்பீர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Apr 11, 2021, 6:40 PM IST
Highlights

ஐபிஎல்லில் 13 ஆண்டுகளாக பேசிக்கொண்டே இருக்கும் ஆர்சிபி அணி, செயலில் காட்ட வேண்டும் என்று கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ்(5), சிஎஸ்கே(3) ஆகிய அணிகள் டைட்டிலை வெல்வதை வழக்கமாகவே கொண்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருபெரும் வீரர்களை பெற்றிருந்தும், கெய்ல், ஷேன் வாட்சன் ஆகிய மிகப்பெரிய வீரர்களை கடந்த காலங்களில் பெற்றிருந்தும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் மிகப்பெரிய வீரர்களை அணியில் எடுப்பதும், அவர்கள் சோபிக்கவில்லை என்றால் தூக்கியெறிவதுமாக, இதையே தொடர்ந்து பல சீசன்களாக செய்துவரும் ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் தங்கள் அணி வலுவாக உள்ளதாக வழக்கம்போலவே தெரிவித்துள்ளது.

14வது சீசனுக்கான ஏலத்தில் மேக்ஸ்வெல், கைல் ஜாமிசன், டேனியல் கிறிஸ்டியன் ஆகிய வீரர்களை அணியில் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல்லை எடுத்ததால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவடைந்திருப்பதாகவும், முன்னெப்போதையும் விட நல்ல காம்பினேஷனை பெற்றிருப்பதாகவும் அந்த அணி நம்புகிறது. அதை கேப்டன் கோலியும் தெரிவித்திருந்தார். இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது.

இந்நிலையில், ஆர்சிபி அணி குறித்து பேசியுள்ள, கேகேஆருக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும் முன்னாள் ஜாம்பவனுமான கவுதம் கம்பீர், ஆர்சிபி அணி பேச்சை குறைத்து செயலில் காட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேஎசியுள்ள கம்பீர், எப்போதுமே ஆர்சிபி அணி வலுவான அணியாகத்தான் இருந்திருக்கிறது. கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் என மிரட்டலான வீரர்கள் அந்த அணியில் இருந்திருக்கின்றனர். எப்போதுமே வலுவான அணியாகவே ஆர்சிபி இருந்திருக்கிறது. ஆனால் களத்தில் சிறப்பாக ஆடுவது அவசியம். 

இப்போதும், கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் மேக்ஸ்வெல்லும் இணைந்திருப்பதால் அணி நன்றாகத்தான் உள்ளது. ஆனால் களத்தில் சிறப்பாக ஆடவேண்டும். 13 ஆண்டுகளாக பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்; செயலில் காட்ட வேண்டும். கெய்ல், பீட்டர்சன் மாதிரியான வீரர்களை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட அவர்களால் அடித்து ஜெயிக்க முடியவில்லை. ஆர்சிபி அணியில் ஏதோ தவறாக இருக்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!