#IPL2021 பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே அரைசதம்..! ஆனாலும் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Apr 11, 2021, 11:05 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி  10 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினார்.

நிதிஷ் ராணாவும் திரிபாதியும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த திரிபாதி 53 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ரசல்(5) மற்றும் மோர்கன்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக், 9 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி 187 ரன்கள் அடித்தது.

188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் வார்னர் 2வது ஓவரில் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ரிதிமான் சஹாவும் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 10 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணியை பேர்ஸ்டோவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர்.

அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ அரைசதம் அடிக்க, மனீஷ் பாண்டே அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சிறப்பகா ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ 55 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரன் வேகம் குறைந்தது. முகமது நபி 11 பந்தில் 14 ரன்களும், விஜய் சங்கர் 7 பந்தில் 11 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.

கடைசி 2 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 7ம் வரிசையில் இறங்கிய அப்துல் சமாத் 8 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தார். 55 ரன்களுடன் மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனாலும் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் மட்டுமே அடிக்க, 10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

click me!