IPL 2023: கடைசில வந்து காட்டு காட்டுன்னு காட்டிய தோனி; 3 ரன்னில் தோற்று ஏமாற்றிய சிஎஸ்கே!

By Rsiva kumar  |  First Published Apr 12, 2023, 11:43 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாஅ 17ஆவது போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 10 ரன்னும், தேவ்தத் படிக்கல் 38 ரன்னிலும், சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரையில் 8 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

IPL 2023: சென்னைன்னாலே செலிபிரிட்டி இல்லாமலா; எல்லோ டிரெசில் சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த சதீஷ், த்ரிஷா!

Tap to resize

Latest Videos

அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தன் பங்கிற்கு சென்னை வீரர்களை கதி கலங்கச் செய்தார். அவர், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜுரெல், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

IPL 2023: சென்னைக்கு ஆட்டம் காட்டிய பட்லர், அஸ்வின், படிக்கல்; ராஸ்தான் ராயல்ஸ் 175 ரன்கள் குவிப்பு!

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் 2 விக்கெ கைப்பற்றியதன் மூலமாக டி20 பார்மேட்டில் தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மொயீன் அலி ஒரு விக்கெட் கைப்பற்றினார். சிறப்பாக ஆடுவார் என்று களமிறக்கப்பட்ட மகேஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. 

இதையடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே ஒரு காட்டு காட்டினார். அவர் 19 பந்துகளில் ஒரு சிக்சர் 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே வந்த வேகத்தில் 8 ரன்களில் வெளியேறினார். இதே போன்று மொயீன் அலியும் 7 ரன்னில் வெளியேற, மகாளாவிற்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வந்த அம்பதி ராயுடு 1 ரன்னில் வெளியேறினார். நிதானமாக ஆடிய டெவான் கான்வே 50 ரன் எடுத்த நிலையில் சகால் பந்தில் ஆட்டமிழந்தார்.

IPL 2023: மொயீன் அலி, மகேஷ் தீக்‌ஷனாவை களமிறக்கிய தோனி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சம்பவம் உறுதி!

இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் எம் எஸ் தோனி இருவரும் ஜோடி சேர்ந்து கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கதி கலங்கச் செய்தனர். இருவரும் சரவெடியாக வெடித்தனர். இது தோனியின் 200ஆவது போட்டி என்பதால் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஒவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். எனினும், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி வின்னிங் ஷாட் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

IPL 2023: சென்னை சேப்பாக்கத்தில் மகுடம் சூடப்போவது யாரு? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?

click me!