ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக டி20 பார்மேட்டில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான 17ஆவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இது அவரது 200ஆவது போட்டி என்பதால் அணியின் உரிமையாளர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக தோனி பல சாதனைகளையும் படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 17 ரன்கள் எடுத்தால், 3000 ரன்களை கடப்பார். ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக தோனி 4482 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு வீரராக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதுவரையில் 9 முறை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சிசாண்டா மகாளா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஆகாஷ் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், த்ருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டன், குல்தீப் சென்,, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.
IPL 2023: சென்னைக்கு ஆட்டம் காட்டிய பட்லர், அஸ்வின், படிக்கல்; ராஸ்தான் ராயல்ஸ் 175 ரன்கள் குவிப்பு!
Jadeja in IPL 2023 with the ball:
4-0-28-1
1-0-14-0
4-0-20-3
4-0-21-2
Wickets of Hardik, Ishan, Green, Tilak, Padikkal, Sanju. pic.twitter.com/d07OurYPbM
முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 10 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக டி20 பார்மேட்டில் ரவீந்திர ஜடேஜா 200 விக்கெட்டுகள் கைப்பற்றி தோனிக்கு ட்ரீட் கொடுத்துள்ளார்.
IPL 2023: மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனாவை களமிறக்கிய தோனி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சம்பவம் உறுதி!
இவரைத் தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும், தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மெயர் 30 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி வரையில் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மொயீன் அலி ஒரு விக்கெட் கைப்பற்றினார். சிறப்பாக ஆடுவார் என்று களமிறக்கப்பட்ட மகேஷ் தீக்ஷானா 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
ஓ இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா, கண்டதும் காதல் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான்!
Jadeja completed 200 wickets in T20 format.
One of the best in world cricket. pic.twitter.com/uczIgpX0un