சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடிகர் சடீஷ் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் நேரில் கண்டு ரசித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாஅ 17ஆவது போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 10 ரன்னும், தேவ்தத் படிக்கல் 38 ரன்னிலும், சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தன் பங்கிற்கு சென்னை வீரர்களை கதி கலங்கச் செய்தார். அவர், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜுரெல், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
IPL 2023: சென்னைக்கு ஆட்டம் காட்டிய பட்லர், அஸ்வின், படிக்கல்; ராஸ்தான் ராயல்ஸ் 175 ரன்கள் குவிப்பு!
பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் 2 விக்கெ கைப்பற்றியதன் மூலமாக டி20 பார்மேட்டில் தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மொயீன் அலி ஒரு விக்கெட் கைப்பற்றினார். சிறப்பாக ஆடுவார் என்று களமிறக்கப்பட்ட மகேஷ் தீக்ஷானா 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
IPL 2023: மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனாவை களமிறக்கிய தோனி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சம்பவம் உறுதி!
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி என்றால் செலிபிரிட்டி இல்லாமலா? என்று நினைக்கும் அளவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தப் போட்டியை நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோர் இணைந்து நேரில் கண்டு ரசித்துள்ளனர். சென்னை அணியை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்கள் மஞ்சள் நிற உடையில் வந்திருந்தனர்.
ஓ இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா, கண்டதும் காதல் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான்!