IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணியில் என்னென்ன மாற்றங்கள்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Apr 7, 2023, 10:18 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.’
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அபாரமாக ஆடி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதல் 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றுள்ள  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், முதல் 2 போட்டிகளிலும் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் அணியும் நாளை கவுஹாத்தியில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன.

Tap to resize

Latest Videos

சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும்னு உலகத்துக்கே தெரியும்! ODI WC அணியில் கண்டிப்பா எடுக்கணும் - பாண்டிங்

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக துருவ் ஜோரல் சேர்க்கப்படலாம். டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த 2 போட்டிகளில் தோற்றிருந்தாலும் கூட, ஆடும் லெவனில் மாற்றம் செய்யாமல் அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்கும். 

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), துருவ் ஜோரெல், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல். 

IPL 2023: அந்த ஒரு பந்தை வீச தெரியலைனா பவுலர்ஸ் வேஸ்ட்..! சிஎஸ்கே பவுலர்களுக்கு லெஜண்ட் பிராவோவின் அறிவுரை

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), ரைலீ ரூசோ, ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அமான் கான், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முகேஷ் குமார்.
 

click me!