அவரை டீம்ல எடுத்திருக்கலாம்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி குறித்து ராகுல் டிராவிட் கருத்து

By karthikeyan VFirst Published May 10, 2021, 5:29 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர்.

3 விதமான இந்திய அணிகளிலும் பிரதான ஸ்பின்னராக திகழ்ந்த குல்தீப் யாதவ், 2019ம் ஆண்டுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது 3 விதமான அணிகளிலுமே எடுக்கப்படுவதில்லை.

அண்மைக்காலமாக அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அசத்தியதால், அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அடுத்த ஆப்சனாக அவர்கள் எடுக்கப்படுகின்றனர். அஷ்வின், ஜடேஜா, சுந்தர், அக்ஸர் ஆகிய நால்வருமே பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்கள் என்பதால், குல்தீப் அவர்களிடம் தனது இடத்தை இழந்தார்.

இந்நிலையில், குல்தீப்பின் புறக்கணிப்பு குறித்து பேசிய ராகுல் டிராவிட், இந்திய அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளது. 20 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அண்மைக்காலத்தில் ஜடேஜா, அக்ஸர் படேல், சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் அவர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அஷ்வின் - ஜடேஜாவை போலவே வாஷிங்டன்  மற்றும் அக்ஸர் படேல் பேட்டிங்கும் நன்றாக ஆடுவதால் பேட்டிங் டெப்த் அதிகரிக்கிறது. எனவே அணியின் சிறந்த லெவன் காம்பினேஷனை கருத்தில் கொண்டு அவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

click me!