#ENGvsIND இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-2 என வெல்லும்..! லெஜண்ட் டிராவிட் கணிப்பு

Published : May 10, 2021, 02:43 PM ISTUpdated : May 10, 2021, 02:51 PM IST
#ENGvsIND இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-2 என வெல்லும்..! லெஜண்ட் டிராவிட் கணிப்பு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என வெல்லும் என ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.  

இந்திய அணி ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து அணி நல்ல ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கை பெற்றிருக்கிறது. ஆனால் அந்த அணியின் டாப் 6-7 பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தான் முக்கியமானவர்கள். அவர்களில் பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக அஷ்வின் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்.

இந்திய அணி இந்த முறை மிகச்சிறந்த தயாரிப்புடன் வலுவான அணியாக செல்கிறது. நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் செல்கிறது. எனவே இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3-2 என இந்திய அணி தொடரை வெல்ல சிறந்த வாய்ப்பிருப்பதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!