#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான்..! ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது

By karthikeyan VFirst Published May 10, 2021, 3:07 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.
 

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, அபித் அலியின் அபார இரட்டை சதம்(215), அசார் அலியின் சிறப்பான சதம்(126) மற்றும் நௌமன் அலியின் பொறுப்பான பேட்டிங்கால்(97) முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

378 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, 2வது இன்னிங்ஸிலும் 231 ரன்களுக்கே சுருண்டது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நௌமன் அலி ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 
 

click me!