மேக்ஸ்வெல், சிராஜ் அட்டாக் பவுலிங்கை சமாளிச்சு 176 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் – ஆர்சிபி வெற்றி பெறுமா?

By Rsiva kumarFirst Published Mar 25, 2024, 9:31 PM IST
Highlights

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 6ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று ஆர்சிபி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இப்படியொரு ரோகித் சர்மாவா? தண்ணில சறுக்கி, ஆட்டம், பாட்டம் என்று ஹோலி கொண்டாடிய டான் – வைரல் வீடியோ!

அடுத்து வந்த பிராப்சிம்ரன் சிங் 25 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் பந்தில் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த லியாம் லிவிங்ஸ்டன் 17 ரன்களில் அல்ஜாரி ஜோசஃப் பந்தில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவான் எவ்வளவோ அடிக்க முயற்சித்தும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜித்தேஷ் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் ஷசாங்க் சிங் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து கொடுக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. ஷசாங்க் சிங் 21 ரன்னும், ஹர்ப்ரீத் பிரார் 2 ரன்னும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

ஆர்சிபி அணியில் அறிமுகமான மாயங்க் டாகர் யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் சேவாக்கின் மருமகன்!

யாஷ் தயாள் மற்றும் அல்ஜாரி ஜோசஃப் இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த போட்டியிலும் மாயங்க் டாகர் விக்கெட் எடுக்கவில்லை. 3 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்துள்ளார். எனினும், அடுத்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், அனுஷ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசஃப், மாயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

சப்ஸ்டிடியூட்:

சுயாஷ் பிரபுதேசாய், மகிபால் லோம்ரார், கரண் சர்மா, விஜயகுமார் வைஷாக், ஸ்வப்னில் சிங்.

வெற்றியோடு க ளமிறங்கும் பஞ்சாப் – கோட்டையில் வாகை சூடுமா பெங்களூரு? டாஸ் ஜெயிச்சு பவுலிங்!  

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிராப்சிம்ரன் சிங், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், ஷசாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், கஜிஸோ ரபாடா, ராகுல் சாகர்.

சப்ஸ்டிடியூட்:

அர்ஷ்தீப் சிங், ரிலீ ரோஸோவ், தனய் தியாகராஜன், ஹர்ப்ரீத் பாட்டீயா, வித்வத் காவேரப்பா.

click me!