அண்ணா, நம்பி கொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான்! தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 9:49 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் ஸ்பின்னர் ஹர்ப்ரீத் ப்ராரை கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் ஆடி வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 2வது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி, சன்ரைசர்ஸ் அணியை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அருமையான வெற்றியை பெற்றது.

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய கேஎல் ராகுல், பஞ்சாப் அணியின் இளம் இடது கை ஸ்பின்னர் ஹர்ப்ரீத் ப்ராரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 15வது ஓவரில் களத்திற்கு வந்த ஹர்ப்ரீத் ப்ரார், 18 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் அடித்தார். இவர் செய்த சிறிய பங்களிப்பு தான், பஞ்சாப் அணியை 125 ரன்களை எட்டவைத்தது. பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஹர்ப்ரீத், 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்றாலும், வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரது ஸ்பெல் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

ஹர்ப்ரீத் குறித்து பேசிய கேஎல் ராகுல், இந்த குறிப்பிட்ட பிட்ச் 160-170 ரன்களுக்கான பிட்ச் அல்ல. இந்த பிட்ச்சில் சரியாக ஆடி சில பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் 140-150 ரன்கள் அடித்திருந்திருக்கலாம். இது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பாடம். ஹர்ப்ரீத் எங்கள் அணிக்கு கிடைத்த நல்ல விஷயம். அவர் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் சிறப்பாக  செய்யக்கூடியவர்.  எங்கள் அணிக்கு(பஞ்சாப்) சில போட்டிகளில் நன்றாக முடித்துக்கொடுத்துள்ளார். பவுலிங்கிலும் நல்ல கண்ட்ரோல் கொடுக்கிறார். ஒவ்வொரு முறை அவரிடம் நான் பந்தை கொடுக்கும்போது, கவலைப்படாதீங்க பாஜி(அண்ணா), ரன் கொடுக்காமல் வீசுகிறேன் என்பார் ஹர்ப்ரீத். அதுதான் அவரது ஆட்டிடியூட் என்று ராகுல் தெரிவித்தார்.
 

click me!