BAN vs IND: சதத்தை நோக்கி புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர்.. கோலி, ராகுல் ஏமாற்றம்

By karthikeyan VFirst Published Dec 14, 2022, 3:18 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடந்துவருகிறது.  ஐசிசி டெஸ்ட்  சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதால் வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறை..! கேஎல் ராகுல் கருத்து

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று வழக்கம்போல நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடிக்க, அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்தார். இருவரும் அரைசதத்திற்கு பின்பும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதத்தை நோக்கி ஆடிவருகின்றனர். 

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

click me!