PSL 2023: அசாம் கான் காட்டடி அடித்து கடைசி ஓவரில் சதம் மிஸ்ஸிங்! 20 ஓவரில் 220 ரன்களை குவித்த இஸ்லாமாபாத் அணி

Published : Feb 24, 2023, 09:42 PM IST
PSL 2023: அசாம் கான் காட்டடி அடித்து கடைசி ஓவரில் சதம் மிஸ்ஸிங்! 20 ஓவரில் 220 ரன்களை குவித்த இஸ்லாமாபாத் அணி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 20 ஓவரில் 220 ரன்களை குவித்து, 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று கராச்சியில் நடந்துவரும் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குவாட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, ரஹ்மானுல்லா குர்பாஸ், வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், முபாசிர் கான், ஹசன் அலி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அப்ரார் அகமது.

ஏதாவது பண்ணுங்க பாஸ்.. இல்லைனா எங்க பசங்க உங்களை பொட்டளம் கட்டிருவாங்க..! ஆஸி., அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:

ஜேசன் ராய், மார்டின் கப்டில், வில் ஸ்மீத், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஒடீன் ஸ்மித், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஐமல் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ 22 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாசினார். கேப்டன் ஷதாப் கான் 14 பந்தில் 12 ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் இறங்கிய அசாம் கான் காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். சிக்ஸர் மழை பொழிந்து சதத்தை நெருங்கிய அசாம் கான் 42 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்

ஆசிஃப் அலி 24 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும், ஃபஹீம் அஷ்ரஃப் 6 பந்தில் 17 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 220 ரன்களை குவித்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!