ஏதாவது பண்ணுங்க பாஸ்.. இல்லைனா எங்க பசங்க உங்களை பொட்டளம் கட்டிருவாங்க..! ஆஸி., அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

By karthikeyan V  |  First Published Feb 24, 2023, 7:39 PM IST

ஆஸ்திரேலிய அணி கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது செய்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணி 4-0 என பொட்டளம் கட்டிவிடும் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார்.
 


ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தி ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் என்பதால் இது முக்கியமான தொடர் ஆகும்.

Tap to resize

Latest Videos

டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி, குன்னெமன் ஆகிய ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ளவும் தீவிர பயிற்சி எல்லாம் செய்தனர். அதனால் இந்திய கண்டிஷனில் வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி கடும் சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஆஸ்திரேலிய அணியோ இந்தியாவிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கியது.

முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2ம் இடத்தை வலுவாக பிடித்துள்ளது. அடுத்த டெஸ்ட்டிலும் ஜெயித்தால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி சோபிக்கமுடியாமல் சொதப்பிவரும் நிலையில், ஜோஷ் ஹேசில்வுட், அஷ்டான் அகர் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்கான எஞ்சிய 2 போட்டிகளுக்கான அணியிலிருந்து விலகியுள்ளனர். கேப்டன் பாட் கம்மின்ஸும் 3வது டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். எனவே அதுவும் அந்த அணிக்கு பின்னடைவுதான்.

இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்திய அணி, அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதால் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யக்கூட வாய்ப்புள்ளது. 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்ட நிலையில், அந்த அணி இந்த தொடரை சமன் செய்யவோ அல்லது ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்கவோ தான் முடியும்.

IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்து. ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலிய அணி மேலாளருக்கான எனது மெசேஜ் - ஏதாவது செய்ங்க பாஸ்... இந்த டெஸ்ட் தொடர் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஏதாவது செய்ங்க.. இல்லையென்றால் இந்திய அணி உங்களை பொட்டளம் கட்டிவிடும். ஏற்கனவே பொட்டளம் ஆகிவிட்டீர்கள் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!