நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து 410 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 128* ரன்களும், கேஎல் ராகுல் 102 ரன்களும் எடுத்தனர். ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51 என்று ஒவ்வொருவரும் அரைசதம் அடித்தனர்.
undefined
பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் ஒவ்வொருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் வெஸ்லி பாரேஸி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் நெதர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும் தனி ஒருவனாக தேஜா நிடமானுரு மட்டும் கடைசி வரை போராடி அரைசதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் சில மறக்க முடியாத சம்பவங்கள் நடந்துள்ளது. அதாவது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பவுலிங் செய்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சாதனை!
நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்கச் செய்து ஒரு நாள் போட்டிகளில் தனது 5ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். தேஜா நிடமானுரு 39 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் குவித்து ரோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கேப்டனாக ரோகித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். மேலும், 7 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக ரோகித் சர்மா பவுலிங் செய்து விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். இறுதியாக நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில், விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே பந்து வீசவில்லை. ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இவர்களைத் தவிர விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா என்று மொத்தமாக 9 வீரர்கள் பந்து வீசியுள்ளனர். இதில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பந்து வீசி புதிய சாதனை படைத்துள்ளனர்.
9 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கைப்பற்றிய விராட் கோலி – சந்தோஷத்தில் துள்ளி குதித்த அனுஷ்கா சர்மா!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 9 லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்த சீசனில் டீம் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து மட்டுமே 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
India vs Netherlands: கடைசி லீக் போட்டியிலும் வெற்றி – உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா!
இந்த நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தீபாவளி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறும். எங்கள் கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிரான அபார வெற்றிக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்! திறமை மற்றும் ஒரு டீமாக இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. அரையிறுதிக்கு வாழ்த்துக்கள்! இந்தியா மகிழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!
Diwali becomes even more special thanks to our cricket team!
Congratulations to Team India on their fantastic victory against the Netherlands! Such an impressive display of skill and teamwork.
Best wishes for the Semis! India is elated.