India vs South Africa: இந்திய வீரர்கள் லன்ச் என்ன சாப்பிடுறாங்கனு பாருங்க..! செம வைரலாகும் லன்ச் மெனு

Published : Dec 27, 2021, 09:11 PM IST
India vs South Africa: இந்திய வீரர்கள் லன்ச் என்ன சாப்பிடுறாங்கனு பாருங்க..! செம வைரலாகும் லன்ச் மெனு

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் லன்ச் உணவு பட்டியல் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.  

பொதுவாகவே திரைத்துறையினர், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை பற்றிய தனிப்பட்ட விஷயங்களையும், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பன போன்ற விஷயங்களையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் மதிய உணவு பட்டியல் செம வைரலாகிவருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகளும், அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று (26ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்திருந்தது. சதமடித்த ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் லன்ச் பிரேக் மழை காரணமாக சீக்கிரமாகவே விடப்பட்டது. அப்போது, இந்திய அணியின் லன்ச்சுக்கான உணவு பட்டியல் எழுதியிருந்த போர்டு வீடியோவில் பதிவாக, அதை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது செம வைரலாகிவருகிறது.

ப்ரோகோலி சூப், சிக்கன் செட்டிநாடு, வெஜிடபிள் கடாய், பன்னீர் டிக்கா ஆகிய உணவுகள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கு இடையே மதிய உணவாக என்ன உண்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் ரசிகர்கள், இதைக்கண்டு தெரிந்துகொண்டதுடன், அந்த புகைப்படத்தை ஷேர் செய்வதால் அது செம வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!