பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!

Published : Mar 10, 2023, 10:31 AM IST
பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!

சுருக்கம்

ஆஸ்திரேலியா அணியின் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸில் தாயார் காலமானதைத் தொடர்ந்து ஆஸி, வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் கேமருன் க்ரீன் ஆகியோர் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர்.  

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்தார். அவரது தாயார் மரியா கம்மின்ஸுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவசர அவசரமாக நாடு திரும்பினார். இதனால், அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்து அணிக்கு வெற்றித் தேடி தந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் கேலரியை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனி: இப்பவே ரெடியான சிஎஸ்கே ஃபேன்ஸ்!

இந்தப் போட்டியைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 75 ஆண்டுகளாக கிரிக்கெட் நட்புறவை பறைசாற்றும் வகையில் நேற்று நடந்த போட்டியை காண்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆகிய இருவரும் மைதானத்திற்கு வந்தனர்.

 

 

13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்களுக்கு தொப்பி கொடுத்து இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். போட்டிக்கு முன் ஒலிக்கப்பட்ட இருநாட்டு தேசிய கீதங்களில் 2 பிரதமர்களும் வீரர்களுடன் கலந்துகொண்டு, வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸில் தாயார் உடல்நிலை சரியில்லாத நிலையில், இன்று காலமானார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மரியா கம்மின்ஸ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தப்படுகிறோம். ஆஸ்திரேலியா கிரிக்கெட் சார்பாக பேட் கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

WPL 2023: டெல்லி கேபிடள்ஸை வெறும் 105 ரன்களுக்கு பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ்

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இன்றைய 2ஆவது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ஏசியாநெட் தழிழ் சார்பாக பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு நாங்களும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

NZ vs SL: ஒரே டெஸ்ட்டில் ஜெயசூரியா, டேனியல் வெட்டோரியின் சாதனைகள் காலி! ஆஞ்சலோ மேத்யூஸ், டிம் சௌதி புதிய சாதனை

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!