மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடள்ஸ் அணியை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன.
மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, மேரிஸென் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு ராணி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா நோரிஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ஹைலீ மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிதா, சாய்கா இஷாக்.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் மட்டுமே நன்றாக ஆடி 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சாய்கா இஷாக், இசி வாங், ஹைலி மேத்யூஸ் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மளமளவென விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி 18 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 106 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டுகிறது.