சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதன் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டி நடந்தது. இவ்வளவு ஏன், இந்தியா டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்த மைதானத்தில் தான். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி இங்கு நடக்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்குள்ளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக 2 ஸ்டேண்டுகள் திறக்கப்படவுள்ளன. ரூ.135 கோடியில் புதிய ஸ்டேண்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அது முடிக்கப்பட்டுள்ளது.
WPL 2023: டெல்லி கேபிடள்ஸை வெறும் 105 ரன்களுக்கு பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ்
இந்த நிலையில் தான், கூடுதலாக 5,306 இருக்கைகள் கொண்ட புதிய ஸ்டேண்டுகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டுகளை வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அவருடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவர்களுடன் பிற அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்
வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் 16ஆவது சீசன் ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.