இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டியானது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 16ஆவது எடிஷனை நடத்துகின்றன. இதில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இன்னும் 2 போட்டிகளில் சூப்பர் 4 போட்டியும் முடிகிறது. இதில், 4ஆவது சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
சிவகாசி பட்டாசு மாதிரி வெடித்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ்: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
முதலில் ஆடிய இந்தியா 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் துனித் வெல்லலகே இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதே போன்று சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!
பின்னர் ஆடிய இலங்கை குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் சுருண்டது. இலங்கை 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் தான் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி நடக்கிறது. ஆனால், பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது இதுவரையில் தொடங்கப்படவில்லை. கொழும்புவில் கனமழை பெய்து வரும் நிலையில், டாஸ் போடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டாஸ் போட முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்தால், இந்தப் போட்டியானது ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?
அப்படி போட்டியானது ரத்து செய்யப்பட்டால் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இலங்கை ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து -0.200 என்ற புள்ளிகள் பெற்றுள்ளது. இதே போன்று தான் பாகிஸ்தானும், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து -1.892 என்று புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டி ரத்து செய்யப்படும் நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும். அப்படி பகிர்ந்து வழங்கப்படும் பட்சத்தில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியானது வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான அட்டவணை: செப்.21ல் கேரளா – பெங்களூரு பலப்பரீட்சை!
Heavy rain in Colombo...!!!!
If it's a wash-out then Pakistan is out of Asia Cup.pic.twitter.com/6UbX7cDVLM