AFG vs PAK: டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

Published : Mar 13, 2023, 06:57 PM IST
AFG vs PAK: டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சுருக்கம்

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பாபர் அசாம் இந்த தொடரில் ஆடாததால் ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகின்றன. மார்ச் 19ம் தேதியுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் முடிவடைகிறது. 

அதன்பின்னர் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மார்ச் 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. 

IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்

இந்த தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆடாததால் இந்த தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஷதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் டி20 அணியில் வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஈசானுல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs AUS: கடைசி டெஸ்ட் போட்டி டிரா.. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை

பாகிஸ்தான் டி20 அணி: 

ஷதாப் கான் (கேப்டன்),  அப்துல்லா ஷாஃபிக், அசாம் கான், ஃபஹீம் அஷ்ரஃப், இஃப்டிகார் அகமது, ஈசானுல்லா, இமாத் வாசிம், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, சயிம் அயுப், ஷான் மசூத், டயாப் தாஹிர், ஜமான் கான். 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!