IPL 2024: ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக விளையாடுவேன் – பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்!

Published : Nov 27, 2023, 03:39 PM IST
IPL 2024: ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக விளையாடுவேன் – பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்!

சுருக்கம்

ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. கடைசியாக இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நடத்தப்பட்டது. 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கிறது.

RCB Released Players List: ஜோஷ் ஹசல்வுட் விடுவிக்கப்பட காரணம் என்ன? ரகசியத்தை வெளியிட்ட தலைமை பயிற்சியாளர்!

இதற்கான மினி ஏலம் முதல் முறையாக துபாயில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நேற்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

Hardik Pandya:அற்புதமான நினைவுகள்: திரும்ப வந்ததில் மகிழ்ச்சி – மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் ஹர்திக் பாண்டியா!

மேலும், அணிகளுக்கு இடையில் டிரேட் முறையில் வீரர்களை மாற்றி கொள்ள வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கடைசி நாளாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட ஒவ்வொரு அணியும், டிரேட் முறையில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

மும்பைக்கு போன ஹர்திக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகும் சுப்மன் கில்!

இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும், லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டனர். இந்த நிலையில், நடந்து முடிந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹசன் அலி, ஐபிஎல் தொடர்களில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு – எந்த அணி எத்தனை கோடி வச்சிருக்கு தெரியுமா?

இது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் விளையாட விரும்புகிறார்கள், அங்கு விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது உலகின் மிகப்பெரிய லீக் தொடர்களில் ஒன்றாகும். எதிர்காலத்தில் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயமாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் சுழல், வேகத்தை தாக்க பிடிக்க முடியாமல் சிதறிய ஆஸ்திரேலியா; ஸ்கைக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். அதில், சோயிப் மாலிக், சோயில் அக்தர், கம்ரான் அக்மல், சோஹைல் தன்வீர், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் உள்பட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், 2009 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

Yashasvi Jaiswal: ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான அசார் மஹ்மூத், பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டில் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடினார். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பிரிட்டன் குடியுரிமை பெற இருக்கும் முகமது அமீர் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியும் ஐபிஎல் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?