மும்பைக்கு போன ஹர்திக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகும் சுப்மன் கில்!

By Rsiva kumar  |  First Published Nov 27, 2023, 12:20 PM IST

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.


ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு – எந்த அணி எத்தனை கோடி வச்சிருக்கு தெரியுமா?

Tap to resize

Latest Videos

அதன்படி, ஒவ்வொரு அணியும் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலமாக இறுதி பட்டியல் வெளியிடபட்டது. இதே போன்று டிரேட் முறையிலும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தங்களது வீரர்களை மாற்றி வருகிறது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது.

ஐபிஎல் டிரேட் முறை மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த 24 ஆம் தேதி குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை அணியில் இணைந்தார். ஆனால், அவர் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியே அவரை தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது.

இந்திய அணியின் சுழல், வேகத்தை தாக்க பிடிக்க முடியாமல் சிதறிய ஆஸ்திரேலியா; ஸ்கைக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

நேற்று மாலை 5.25 மணிக்கு குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது. ஆனால், இரவு, 7.25 மணிக்கு டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் க்ரீன் தக்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால், நேரம் முடிந்ததும், வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் வர்த்தகம் தொடங்கியது. அதில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துக் கொண்டது. கேமரூன் க்ரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஒப்பந்தம் செய்தது. எனினும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரையில் டிரேட் எனப்படும் வர்த்தம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Yashasvi Jaiswal: ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

அதற்குள்ளாக வீரர்களை மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில், அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்த நிலையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே ஒப்பந்தம் செய்தது. இதன் காரணமாக குஜராத் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார்.

click me!